சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியானது.
கடந்த 10ஆம் திகதி வவுனியாவில் நடந்த சடடமா அதிபர் திணைக்களத்தின் விருந்தினர் விடுதி திறப்பு விழாவில் சட்டமா அதிபர் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கல்முனை பிராந்தியத்தை சேர்ந்த அரச சட்டவாதியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருடன் தொடர்பு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர், அவரது குடும்பத்தினர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் யாருக்கும் தொற்று இல்லையென தெரிய வந்துள்ளது.