மேல் மாகாணப் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளைத் தான் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் எனவும் அவர் கூறினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.