மக்கள் ஒன்றாக இருந்து உணவருந்தும்போதே கொரோனா பரவலுக்கான அதிக சாத்தியம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேலா குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
திருமணங்களில் மக்கள் ஒன்றாக உணவு உண்ணும்போது வைரஸ் பரவுவதற்கான அதிக ஏதுக்கள் உள்ளன. மக்கள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் இதை ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை,
அத்துடன் அவர்கள் ஒன்று சேரும்போது அடிப்படை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை. இந்தநிலையில் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அங்கு சுகாதார வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுவதே முக்கியமாகும்.
அநேகமாக, குறைந்தது இரண்டு வருடங்களாவது இலங்கையர்கள் வைரசுடன் வாழ வேண்டியிருக்கும். எனவே, வைரஸை அகற்றுவதற்கான ஒழுங்குகளை, வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது முக்கியமானது என்றார்.