ஆப்கானிஸ்தான் கஸ்னி மாகாணம் கெலான் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கஸ்னி மாகாணத்தில் உள்ள கெலான் மாவட்டத்தில் அதிகமான மக்கள் ஒரு வீட்டில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் ஒருவாரத்திற்குள் நடந்த 2-வது வெடிப்புச் சம்வம் இதுவாகும். இதற்கு முன் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் முக்கிய அதிகாரி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.