கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), Pfizer/BioNTech தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்குப் பிறகு அமெரிக்க நிறுவனமான மாடர்னா உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் மில்லியன் கணக்கான டோஸ்கள் விநியோகிக்கப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரும் மாடர்னா நிறுவனத்திடமிருந்து 200 டோஸ்களை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதற்கட்டமாக 6 மில்லியன் டோஸ்கள் அமெரிக்காவுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளதாம்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த முக்கிய முன்னேற்றத்தை வரவேற்கும் வகையில், வாழ்த்துக்கள், மாடர்னா தடுப்பூசி இப்போது கிடைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Congratulations, the Moderna vaccine is now available!
— Donald J. Trump (@realDonaldTrump) December 19, 2020