பல அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் மீதான பேரழிவுகரமான சைபர் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா உள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிநாட்டு சக்தியால் ஆதரிக்கப்படுவதாகக் கூறப்படும் ஒரு ஹேக்கிங் குழு பல அமெரிக்க அரசாங்க நிறுவனங்களின் தரவைத் திருடியது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், அண்மையில் தனது நாட்டுக்கு எதிரான ஹேக்கிங் தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
the mark levin show-வில் பேசிய மைக் பாம்பியோ, அமெரிக்க அரசாங்க கணினி அமைப்புகளுக்குள் குறியீட்டை உட்பொதிக்க மூன்றாம் தரப்பு மென்பொருளைப் பயன்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது மிக முக்கியமாக கவனிக்கத்தக்க வேண்டிய முயற்சி, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது ரஷ்யர்கள்தான் என்பதை இப்போது நாம் தெளிவாகக் கூற முடியும் என்று பாம்பியோ குற்றம்சாட்டினார்.
கணினி அமைப்புகளில் சைபர் தாக்குதல் நடத்தியது ரஷ்ய ஹேக்கர்கள் என்ற குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு, ரஷ்ய இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.