இந்த வாரம், அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதன் சொந்த மாநிலமான கலிபோர்னியாவில் செயல்படும் 53 சில்லறை கடைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள கடைகளின் பட்டியல் மாற்றத்தை பிரதிபலிக்கிறது, இது எல்லை மாநிலங்களான அரிசோனா மற்றும் நெவாடாவை பாதிக்காது.
வணிகத்தில் பாதிப்பு ஈறும் நிலையிழும், பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக இயங்கும் ஆப்பிள் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கும் நுகர்வோருக்கும் வைரஸ் பரவுவதை குறைக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அடுத்த சில நாட்களில் Genius Bar பழுதுபார்த்துள்ள ஆர்டர்கள் மற்றும் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் இல்லாமல் போய்விட்டதாக அரசு கூறியதையடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஆப்பிள் தனது கடைகளை தற்காலிகமாக அடைத்துள்ளது.
கலிபோர்னியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 35,729-ஆக இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த புதன்கிழமை 53,711-ஆம் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.