ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
காபூல் நகரில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை ஆப்கான் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் ஆப்கான் எம்.பி Khan Mohammad Wardak சென்ற காருக்கு அருகே இடம்பெற்றதாகவும், இதில் எம்.பி மற்றும் அவரது பாதுகாவலர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எம்.பி Khan Mohammad Wardak காரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வரை எந்த அமைப்பும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
جزییات: منابع به آریانا نیوز میگویند که انفجار امروز در ناحیه پنجم شهر کابل بر موتر خان محمد وردگ، عضو ولسی جرگه صورت گرفته است.
بر بنیاد گزارشها در این انفجار خان محمد وردگ و چند محافظ وی زخم برداشته اند.#ArianaNews #ATNNews #AfghanNews #AryanaNews #ATN #News #Afghanistan pic.twitter.com/FIUkiBF9cg— Ariana News (@ArianaNews_) December 20, 2020
கடந்த மூன்று மாதங்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய 35 தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் 507 வெடிகுண்டு தாக்குதலில் 480-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் தெரிவித்துள்ளது.
கஸ்னியில் மட்டும் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
It’s another morning & Kabul is witnessing another deadly explosion. Peace process & dialogues seems just a lollipop. pic.twitter.com/Z0niTbCkVj
— Ihtesham Afghan (@IhteshamAfghan) December 20, 2020
செப்டம்பர் முதல் கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கான் அரசாங்கமும் தலிபானும் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன, இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.