நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 594 கொரோனா தொற்றாளர்களில், பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவ்கள்.
கொழும்பிலிருந்து 253 பேரும், கம்பஹாவிலிருந்து 124 பேரும், களுத்துறையிலிருந்து 49 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
கொழும்பு மாவட்டத்தில்- பொரளையிலிருந்து 62 பேர், கொம்பனிதெருவிலிருந்து 30, புளுமென்டலிலிருந்து 27 பேர், மட்டக்குளியிலிருந்து 22 பேர், கிராண்ட்பாஸிலிருந்து 18 பேர், தெமடகொடவிலிருந்து 17 பேர், சினமன்கார்டன், புதுக்கடையிலிருந்து தலா 12 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கண்டி மாவட்டத்தில் இருந்து 62 பேரும், இரத்னபுரியிலிருந்து 16 பேரும், ஹம்பாந்தோட்டையிலிருந்து 15 பேரும், திருகோணமலையில் இருந்து 14 பேரும், மாத்தறையிலிருந்து 13 பேரும், குருநாகலில் இருந்து 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மேலும் ஏழு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் மொத்தம் 16,109 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கம்பஹாவிலிருந்து 8,306 பேரும், களுத்துறையிலிருந்து 2,617 பேரும், கண்டியில் இருந்து 1,368 பேரும், திருகோணமலையில் 42 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.