இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 163 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















