சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக இரண்டு வர்த்தக நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டன.
பருத்தித்துறை நகர பொதுச் சுகாதார பரிசோதகரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றும் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு நேற்று மூடப்பட்டன.
மேல் மாகாணத்துக்குச் சென்று திரும்பிய உரிமையாளர்கள் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்தல் வழங்காமல் சுகாதார நடைமுறைகளை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலேயே அவை மூடப்பட்டன.


















