கிளிநொச்சியில் மேலும் இரண்டு பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி கிளிநொச்சி பாரதிபுரத்ததைச் சேர்ந்த ஒரே குடுப்பத்தில் ஆண் மற்று பெண்கள் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கிளிநொச்சி வைத்திசாலைக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை கிளினிக் சென்ற குடும்பத் தலைவரின் மாதிரி பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது.
பாரவூர்தியின் சாரதியான இவர் வத்தளைக்குச் சென்று திரும்பியுள்ளார். இதனால் அவருடைய குடும்பம் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் படி தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த சாரதியின் மகன் மற்றும் மருமகளுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.



















