கேகாலை வைத்தியர் தம்மிக பண்டாரவால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தேசிய ஒளடதத்துக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒளடதத்துக்கு ஏற்கனவே தேசிய மருத்துவத்தால் விஞ்ஞான ரீதியாக உணவு நிரப்பியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, சுய விருப்பத்தின் பேரில் இந்த ஒளடதத்தைப் பெற்றுக்கொள்வதைத் தடுக்க முடியாது. – என அவர் குறிப்பிட்டுள்ளார்.


















