தமது அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த-சிங்கள மக்களை திசை திருப்பும் எதிர்க்கட்சியினரின் முயற்சி வெற்றியளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பௌத்த தேரர்களின் ஆசீர்வாதத்துடனும் சிங்கள-பௌத்த மக்களின் பெரும்பான்மை ஆதரவுடனுமேயே தாம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஒரு சில பௌத்த தேரர்களினதும், குறிப்பிட்ட ஒரு தரப்பு மக்களினதும் விமர்சனங்களைக் கொண்டு ஒட்டுமொத்த சிங்கள-பௌத்த மக்களையும் தமக்கு எதிராகத் திசை திருப்பும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியினர் களமிறங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பேராதரவுடனும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடனும் வெற்றிபெற்ற தமது அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.