பிக்பாஸ் சீசன் 4ன் மூலம் பிரபலமான ஜித்தன் ரமேஷ் வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜீவாவின் சகோதரரான ரமேஷ் தமிழில் 10 படங்களில் நடித்துள்ளார், எனினும் ஜித்தன் படமே இவருக்கு நல்ல பெயரை எடுத்துக் கொடுத்தது.
அதன்பின்னர் வந்த பட வாய்ப்புகளும் தோல்வியில் முடியவே, 2016ம் ஆண்டு வெளியான ஜித்தன் 2 படமும் சரியாக ஓடவில்லை.
இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்
.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஜித்தன் ரமேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் பிக்பாஸில் தனக்கு இத்தனை நாட்கள் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பிக் ஆதரவு எனக்கு ஆதரவு கொடுத்தது போல என்னுடைய படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்.
மேலும், நான் என்னிடம் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லுங்கள் என்று கூறியிருந்தார் ஜித்தன் ரமேஷ்.
இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் உங்கள் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுங்கள் என்று கேட்க, இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




















