இலங்கை அணிக்கு எதிரான முதலாவது செட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா அணி தனது நுழைவது இன்னிங்ஸிற்காக 621 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சுரியனில் ஆரம்பமானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென் ஆபிரிக்கா அணி 142.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 621 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அவ்வணி சார்பாக டு பிளெசிஸ் 199 ஓட்டங்களையும் டீன் எல்கர் 95 ஓட்டங்களையும் கேசவ் மகாராஜ் 73 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் வணிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும் விஸ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்களையும் குசால் மெண்டிஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இந்நிலையில் 225 ஓட்டங்கள் பின்னிலையுடன் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.



















