இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,000 ஐ கடந்துள்ளது.
நேற்று 460 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,063 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 418 பேர், மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவங்கொட- பேலியகொட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,343 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
3 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 7,943 பேர் தற்போது 65 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, 704 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33,925 ஆக உயர்ந்தது.
வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் 620 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.