மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போடுவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
மாகாணசபை தேர்தல் சட்டங்களிற்கு தீர்வு கண்டபின்னர் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென தீர்மானிக்க முடியும் என்றார்.
மாகாணசபை தேர்தல் சட்டங்களில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டுமென்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.