சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெருக்கடியை குறைப்பதற்காக போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 8 ஆயிரத்து 500 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை மஹர சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் இறுதி அறிக்கை நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,
போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களில் போதைப் பொருளை பயன்படுத்தியோர் மற்றும் போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டுள்ள நபர்களில் போதைப் பொருளை பயன்படுத்திய நபர்களை அடையாளம் கண்டு அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.