உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 189,671 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி இறப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக 3,927 பேர் இறந்துள்ளனர் என பால்டிமோர் சார்ந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதன்முலம், அமெரிக்காவில் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,715,899-ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 341,845ஆகவும் உயர்ந்துள்ளது.
இருப்பினும், தொற்றுநோயின் மோசமான நிலை இன்னும் வரவில்லை என்றும் குளிர்கால மாதங்களில் மற்றும் முக்கிய விடுமுறைக் கூட்டங்களுக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் உயரும் என நாட்டின் முன்னணி தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபாசி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் பல இடங்களில் தடுப்பூசி திட்டம் தொடங்கபட்டுள்ளது, இதுவரை 2.8 மில்லியன் மக்கள் தங்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் தடுப்பூசிகல் போடப்படும் என உறுதியளித்திருந்த நிலையில், இந்த திட்டம் மிகவும் பின்னோக்கி இருக்கிறது.