தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பா.ஜ.கவில் இணைந்தார்.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய இவர், 1987 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக தனது இறுதிப்போட்டியை விளையாடினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ் வர்ணனையும் செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அவர், தமிழக பாஜக கட்சி தலைவர் எல். முருகன் முன்னிலையில், தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.



















