ஆந்திராவில் காதல் திருமணம் செய்த பெண்ணை, பழிவாங்குவதற்காக அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் கணவன் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்து வருபவர் ரேவந்த்.
இவரும், திருப்பதி அருகே உள்ள திம்மா நாயுடு பள்ளியை சேர்ந்த நிரோஷா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது நிரோஷாவின் பெற்றோர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து ஒரு மாதம் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், ரேவந்த், இன்னும் தனக்கு பணம் வேண்டும் என்று கூறி, நிரோஷாவை டார்ச்சர் செய்துள்ளார்.
நிரோஷா இப்போது தானே திருமணம் ஆனது, அதற்கு வாங்கிய கடனையே இன்னும் பெற்றோரால் தீர்க்கப்படவில்லை, அதற்குள் கேட்டால் என்ன செய்வது என்று கூறியுள்ளார்.
ஆனால், ரேவந்த மனைவியை வரதட்சனை கொடுமை செய்து வந்துள்ளார்.
நிரோஷா தொடர்ந்து மறுத்து வந்ததால், கடும் ஆத்திரமடைந்த ரேவந்த் மனைவியை பழிவாங்குவதற்காக அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடுவிடாமல், தன் மனைவியை விபச்சாரி என்று குறிப்பிட்டு, அதில் நிரோஷாவின் போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட இணையவாசிகள் உடனடியாக நிரோஷாவின் நம்பரை தொடர்பு கொண்டு கண்டபடி பேசியுள்ளார். இது எல்லாம் தன் கணவனின் வேலை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த நிரோஷா உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேவந்த் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.