தமிழகத்தில், தனது நண்பர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு விழாவை கொண்டாட வந்த நபர், சிறிய தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்காக பெருங்களத்தூர் சென்றுள்ளார்.
இதையடுத்து, ரமேஷ் மது வாங்குவதற்காக உள்ளூர் நேரப்படி 11:30மணி அளவில் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் மது வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது 15,வயது சிறுவனுக்கும் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதுள்ளது.
ரமேஷ் பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த சிறுவனை அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளான்.
பின்னர், பேருந்து நிலையத்தில் ரமேஷ் நின்று கொண்டிருக்கும் பொழுது சிறுவனின் நண்பர்கள் மூன்று பேர் அரிவாளுடன் வந்து ரமேஷின் தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருங்குளத்தூர் பொலீசார், ரமேஷை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.