இந்தியாவில் மருமகளை கொலை செய்து சடலத்தை ப்ளாஸ்டிக் பையில் அடைத்து கடற்கரையில் தூக்கி வீசிய மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் பங்கஜ். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமணத்தில் பங்கஜின் தந்தை கமல் ராய்க்கு (55) விருப்பம் இல்லாமல் இருந்தது. இதோடு நந்தினியின் நடத்தையில் கமல் சந்தேகப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பங்கஜ் வேலைக்கு கிளம்பி சென்றார். அப்போது தனியாக இருந்த நந்தினியை கொலை செய்ய கமல் முடிவெடுத்தார்.
இதையடுத்து தனது இரு நண்பர்கள் உதவியுடன் தூங்கி கொண்டிருந்த நந்தினி முகத்தில் தலையணையால் அமுக்கி கமல் கொலை செய்தார்.
பின்னர் சடலத்தை பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி கடற்கரை பகுதியில் தூக்கி போட்டிருக்கிறார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு கமலை கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் இது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.