அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான கோடீஸ்வரர் சக ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Jonathan Van Ness என்பவர் நடிகர், தொலைக்காட்சி பிரபலம், எழுத்தாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வருபவர்.
இவரின் சொத்து மதிப்பு 2020 கணக்கின்படி $5 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக Jonathan தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் சமூகவலைதள பதிவில், என்னை இங்கு இருக்க அனுமதித்தமைக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி மற்றும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
2020 மற்றதைப் போலல்லாமல் ஒரு வித்தியாசமான வருடம்.
நான் எனது நெருங்கிய நண்பருடன் திருமணம் செய்துகொண்டேன், தொடர்ந்து என் வாழ்க்கையை கட்டியெழுப்ப ஒரு அன்பான கூட்டாளியைக் கொண்டிருக்கிறேன்.
வரும் நாட்களில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.