வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். 2020-ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும் ஜனவரி 20க்கு பின்னர் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘2020-ஆம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் முதல் காட்டுத்தீ மற்றும் சூறாவளி, இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
There’s no denying that 2020 has been a difficult year. From a global pandemic, to reckoning with racial injustice, to the devastating wildfires and hurricanes, there has been so much grief, struggle, and pain. But we’ve also seen America at its best.
— Kamala Harris (@KamalaHarris) January 1, 2021
கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது சவாலான பணிகளை மேற்கொண்ட முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.
2021 ஆம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.