லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் புத்தாண்டு இரவு நகர மக்கள் வானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக லெபனானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பலர் 2021-ஐ துப்பாக்கிச் சூடு நடத்தி வரவேற்க்க உள்ளதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டனர்.
நாட்டில் பல நகரங்களில் மக்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புத்தாண்டை கொண்டாடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், புத்தாண்டு இரவு வானத்தை நோக்கி தோட்டாக்கள் பாய்ந்தது போர்க்களம் போல் காட்சியளித்ததாக பலர் விமர்சித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தால் பெய்ரூட் வான்வெளியில் பறந்த நான்கு விமானங்களை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்துள்ளன.
தோட்டாக்கள் துளைத்ததில் சேதமடைந்த நான்கு விமானங்கள் லெபனானின் மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Classic beirut gunfire last night. To quote a friend: "who needs Iron Dome when you've got this?"
Jokes asides, dozens of people get injured every NYE from stray celebratory bullets. pic.twitter.com/HxF7YdoEVK
— Sebastian Shehadi (@seblebanon) January 1, 2021
அதுமட்டுமின்றி, கிழக்கு நகரமான பால்பெக்கில் உள்ள அகதி முகாமில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சிரிய அகதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


















