அரசாங்கத்திற்கு வாக்களித்த சிறுபான்மைத் தரப்பினருக்கு என்ன கிடைத்தது? அந்த முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசா எரிப்பதை நிறுத்த முடியாத நீங்கள் அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுத்தும் பலனில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
எதற்காக வாக்களித்தார்கள் என்பது பலருக்கு இன்றும் தெளிவில்லை. கடந்த காலத்தில் வரவு – செலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய நிலையில், கம்பெரலிய திட்டத்தினூடாக 60 கோடி ரூபா வேலைத்திட்டம் செய்யப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




















