யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சந்தைகளில் மாத்திரம் கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியும் எனவும், ஏனைய பகுதிகளில் உரித்து இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும்.