கொரோனா தொற்றை அடுத்து வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் தற்போது நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வௌிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறு பொறுப்பற்ற வகையில் பரப்பப்படுகின்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைத்து இலங்கை பிரஜைகளும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபட விரும்புவோருக்கு மாத்திரமே, கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.