அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பொறுமையுடன் செயற்பட்டு வருவதாகவும் நிலைமை சரி செய்யப்படவில்லை என்றால், கட்சி என்ற வகையில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்கால அரசியல் சம்பந்தமாக ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கின்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறக்கத்தில் இல்லை. அனைத்தையும் சரியாக முறையில் கண்காணித்து வருகின்றோம். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டு வர தேர்தலில் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கிய தரப்பினர் தற்போது, பலமிழந்து, செயலிழந்து, விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
சிலர் குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளனர். ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள இது சிறந்த எச்சரிக்கை விளக்கு. இதனை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படியில்லை என்றால் எதிர்க்கட்சி எழுச்சி பெறும். பொறுமையுடன் நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இருக்கின்றோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கூறுகிறோம். மக்களின் துயரங்களுக்கு தீர்வை தேடுங்கள் என கூறுகிறோம். அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புகிறோம்.
இவற்றுக்கு தீர்வு கிடைக்காது போனால், கட்சி என்ற வகையில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.