அவுஸ்திரேலியாவில் ப்ளூ மௌண்டைன் பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு ஆற்றில் கிடந்த 2 சடலங்களை தேடல் குழு கடந்த சனிக்கிழமை மீட்டது. அப்போது இறந்தவர்களில் ஒரு பெண்ணைப் பற்றிய தகவல் தெரியவந்ததும் New South Wales பொலிஸ் அதிர்ச்சியடைந்து.
அந்தப் பெண் அதே New South Wales காவல்துறையில் பணியாற்றிய சீனியர் கான்ஸ்டபிள் கெல்லி போஸ்டர் என தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மற்றோரு இளம் பெண், அவுஸ்திரேலியாவின் சிஸ்விக் நகரத்தில் படித்துவரும் வெளிநாட்டு மாணவி ஆவார். அவர் சீன நாட்டைச் சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் மேலும் 8 பேர் கொண்ட குழுவுடன் மவுண்ட் வில்சன் பகுதிக்கு சாகசங்கள் நிறைந்த canyoning tour-க்கு வந்துள்ளனர். அப்பகுதியில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து இருந்துள்ளது.
இந்த நிலையில், இளம் சீன மாணவி தனது லீலாவிலிருந்து தவறி நீரில் விழுந்துள்ளார். அப்போது கெல்லி போஸ்டர் உடனடியாக அவரைக் காப்பாற்ற நீரில் குதித்துள்ளார்.
ஆனால் வெள்ளோட்டம் அதிக இருந் நிலையில் இருவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். பின்பு நீர்சுழற்சியில் சிக்கி துரதிருஷ்டவசமாக இருவரும் நிற்கும் மூழ்கி இறந்துவிட்டனர்.
வானிலை காரணமாகவும் தொலைதூரத்தில் இருந்ததாலும் அங்கிருந்தவர்களால் அவசர யூட்டிகவியை நாட முடியவில்லை. இதனால் இவர்களது உடல் ஒரு நாள் கழித்தே மீட்கப்பட்டுள்ளது.
கெல்லி போஸ்டர் கடந்த 2014-ஆம் ஆண்டு வரை மாநில புலனாய்வு துறையில் உளவுத்துறை ஆய்வாளராக சேர்த்துள்ளார். ஒரு கட்டத்தில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பணியில் இருந்து விலக்கியதாகக் கூறப்படுகிறது.