அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (05) வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்கள் இணைந்து எட்டு மாவட்டங்களிலும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
யாழ்மாவட்டத்தில் நல்லூர், மற்றும் சாவகச்சேரி நகர், கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ9 வீதி பழைய கச்சேரி முன்றல், மன்னார் மாவட்டத்தில் முருங்கன், மன்னார் நகர் பகுதி, முல்லைத்தீவு வவுனியா, திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் நகர் பகுதிகளில் இந்த போராட்டம் நாளை காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
இப்போராட்டத்தில் மத தலைவர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரிதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் கைதிகளின் உறவுகள் கலந்துகொள்ளவுள்ளனர்.