இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் அனுசரணையுடன் செய்துக்கொள்ளப்பட்ட மாகாணசபை முறையை இல்லாதொழிப்பது தொடர்பாக இலங்கையின் அரசாங்க மட்டத்தில் பேசப்படும் விடயங்கள் மற்றும் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஜெய்சங்கர் இலங்கையின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என்று இந்திய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


















