அம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (08) இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீதிகளில், வீடுகள் வயல் நிலங்கள் நீரினால் மூழ்கியுள்ளது.
தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழக்கையும் பாதிக்கப்பட்டு பல அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
அம்பாறை மாவட்ட, கல்முனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை,
அக்கரைப்பற்று, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள அதேவேளை குளத்தின் நீர் மட்டமும் உயர்வடைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.