முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை, அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கையென ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை இலங்கையில் நடக்கவேயில்லையென அவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இதன் பின் பல்கலைகழகத்தில் தூபி உடைக்கப்பட்டது. இரண்டும் தொடர்புடைய சம்பவங்கள் என சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
https://www.facebook.com/raghavansuren/posts/10157937128706167
முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்பட்டிருக்க கூடாது என மென்மையான தொனியிலாவது கோட்டா அரசின் நடவடிக்கையை எதிர்க்கும் துணிவு தேசியப்பட்டியல் எம்.பி சுரேன் ராகவனிற்கு இருந்துள்ளது.
எனினும், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற ஆளுந்தரப்பு தமிழ் எம்.பிக்கள் மௌனமாக இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.