சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். இதில் தயாரிக்கபடும் ஸ்க்ரப், பேக் போன்றவை சருமத்திற்கு நல்ல பொழிவை தருகின்றது.
இந்த சாக்லெட் ஸ்க்ரப் எல்லா சருமத்திற்கும் ஏற்றது. இதில் பேக்டீரியாக்களின் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது.
இதனால் முகப்பருக்கள் மீது செயல் புரியும். இந்த ஸ்க்ரப் அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றையும் அகற்றிவிடும்.
தற்போது சாக்லெட்டை கொண்டு சருமத்தை எப்படி மிளர வைப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை
- பொடித்த சர்க்கரை – அரை கப்
- நாட்டுச் சர்க்கரை – அரை கப்
- புதினா எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
- கோகோ பவுடர் – அரை ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் – அரை கப்
செய்முறை
முதலில் சக்கரை, கோகோ பவுடர், நாட்டுச் சர்க்கரை இவற்றை முதலில் கலந்து, இவற்றில் புதினா மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை சருமத்தை மென்மையாக்கும். கோகோ ஆழமாக சுத்தம் செய்து, இறந்த செல்களை அகற்றும். இவை அனைத்தும் சேர்ந்த கலவை முகத்தில் அற்புதம் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஸ்க்ரப் சிறிது எடுத்து, முகம் , கழுத்து, கைகளில் தேய்த்து குளிக்கலாம்.
வாரம் மூன்று முறை செய்யுங்கள். பலன் அற்புதமானது. சருமம் மிருதுவாகி, எந்த வித தழும்புகளும் இல்லாமல் மிளிர வைக்கும்.