இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி தண்ணீர் நிறைந்திருந்த அணையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட்டை சேர்ந்தவர் Puja Bharti (22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் தனது தாயாரிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசினார் Puja. அப்போது தனக்கு பரீட்சை இருப்பதாக கூறியிருக்கிறார்.
பின்னர் மாலை 3 மணிக்கு தாயார் Puja-ஐ தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜார்கண்டில் உள்ள பட்ரடு அணையில் Puja சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன.
Puja-வின் பிரேத பரிசோதனையில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரித்த போது Puja பரீட்சைக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
அவர் வகுப்பில் உடன் படிக்கும் மாணவர் தான் Puja -வை கொலை செய்துவிட்டதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
புகாரையடுத்து பொலிசார் தங்கள் விசாரணை துரிதப்படுத்தியுள்ளனர்.