உலக பிரசித்தி பெற்ற பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்கத்தில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து, முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர்.
https://youtu.be/yjTf3KCd-Bs