இந்த வருடத்தின் கோடை காலம் என்பது பிரித்தானியப் பிரஜைகளுக்கு கொறோனா அச்சமற்ற ஒரு கோடைக்காலமாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளில் துடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது பிரித்தானியா.
அந்த அடிப்படையில், எதிர்வரும் மார்ச் மாத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட சுமார் 32 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பிரித்தானியாவின் NHS என்ற தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம்.
பெப்பரறி 15ம் திகதிக்கு முன்னதாக 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பிரித்தானியப் பிரதமர் பொறிஞ்ஜோன்சனின் திட்டத்தின்படி, இதுவரை 2.6 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்காக எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளார்கள். 2700 நிலையங்களில் இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வருகின்ற வாரங்களில் இந்த நடவடிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ளதாகவும், அடுத்த 16 வாரங்களுக்கு 32 மில்லியன் பேர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் இந்த திட்டம் விரைவுபடுத்தப்பட உள்ளதாகவும் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு NHS தெரிவித்துள்ளது.