கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது மக்களுக்கு எச்சரித்துள்ளது.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் உள்ள மக்கள் உடனடியாக சவுதி அரேபிய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணிக்க விரும்பும் சவுதி அரேபியர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்து,
பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.