மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்ததோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த ‘இரட்டை வெடிப்பு’ தயரன் சதுக்கத்திற்கு அருகிலுள்ள பாப் அல்-ஷார்ஜி பகுதியில் நெரிசலான சந்தையை குறி வைத்து நடத்தப்பட்டதாக, பாக்தாத் ஆபரேஷன்ஸ் கமாண்டின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் ஹசீம் அல்-அஸ்ஸாவி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் பொலிஸார் அஞ்சுகின்றனர்.
2003ஆம் ஆண்டு அமெரிக்க படையெடுப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏற்பட்ட பயங்கர குறுங்குழுவாத வன்முறைகளுக்குப் பிறகு, தலைநகரில் தற்கொலை குண்டுவெடிப்புகள் ஒப்பீட்டளவில் அரிதாகிவிட்டன. இதுபோன்ற கடைசி தாக்குதல் 2019 ஜூன் மாதம் நடந்தது.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, ஆனால் தற்கொலைத் தாக்குதல்கள் பெரும்பாலும் ஐ.எஸ்.ஐ.எல் குழுக்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
At least 13 people were killed in a rare twin suicide bombing in a commercial district of #Baghdad on Thursday, Iraq's joint operations command said, rupturing months of relative calm. pic.twitter.com/wefsC6czpy
— WION (@WIONews) January 21, 2021




















