ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்குள் அமைச்சர்கள் பலர் முரண்பட்டு வருவருகின்றனர்.
கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் தன்னிச்சையானவை என்று மூத்த அமைச்சர்கள் பலர் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக அமைச்சர் டலஸ் அழக பெருமா கூறியுள்ளார்.
மேலும் வாக்களித்த மக்கள் மட்டுமல்ல அமைச்சராகிய தானும் கோட்டா அரசு மீது வெறுப்பில் இருப்பதாகவும் அமைச்சர் டளஸ் அழகபெருமா மாத்தறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
அதேவேளை, கோட்டாபய ராஜபபக்ச எடுக்கும் தீர்மானத்தை அனைத்து அமைச்;சர்களும் ஒருமனதோடு ஏற்க வேண்டுமென அமைச்சர் ஜென்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறுவிதமாக கருத்து வெளியிட்டால் அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்புக்கு ஆபத்து நேரிடுமெனவும் அமைச்சர் ஜென்ஸ்டன் தெரிவித்தார்.
இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், அமைச்சர்கள் சிலர் சந்தித்தப் பேசியுள்ளதாகவும் தமது அமைச்சுக்களுக்குரிய செயலாளர்கள் நியமனங்கள் கோட்டாபய ராஜபக்சவினால் தன்னிச்சையாக நியமிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.