சீனாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக மூன்று லட்சம் ஷினோபாம் கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் அவை இலங்கைக்கு வழங்கப்படும் என சீனத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடுப்பூசி தொகை வழங்கப்படுகின்றது.
குறித்த தடுப்பூசி 79 முதல் 86 சதவீத கொவிட்-19 நோய் தடுப்பு வினைத்திறன் கொண்டதெனவும் சீனத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.