மன்னார்-மாந்தை பகுதியில் காவற்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 31 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்பரப்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா 11 மில்லியன் ரூபாய் பெறுமதி கொண்டவை என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
குறித்த கேரள கஞ்சா மேலதிக பரிசோதனைகளுக்காக வங்காலை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.