மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் பலியாகினர்.
வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மியான்கல் வயல்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலியானார்.
வயலில் அமைக்கப்பட்டுள்ள பரணில் நேற்றைய தினம் காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தபோது, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அவர் மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவரே மரணித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கரடியனாறு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈரலகுளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் மரணித்ததாக கரனடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பழைய சந்தை வீதி, சித்தாண்டி 4 கிராமத்தை சேர்ந்த 34 வயதான ஒருவரே மரணித்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
தமது வயல் காணியில் வைத்து அவர் இன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கரனடியனாறு காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.