இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 60,000 ஐ கடந்தது. இந்த மைல்கல்லை எட்டும் 91வது நாடாக இலங்கை இன்று பதிவானது.
இன்று 311 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,233 ஆக உயர்ந்தது.
7,379 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று முன்னதாக, 1,520 நபர்கள் COVID-19 இலிருந்து மீண்டு வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,566 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 781 நபர்கள் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.