போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் இந்திய மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது.
மத்திய அரசு மௌனம் சாதிக்காமல் உடனே இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.