நாட்டில் மேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு-15 பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவருக்கு கொவிட் -19 தொற்றுறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலை, மோசமடைந்த இதய நோய் அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோனபொல பகுதியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர், ஹொரனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா, சிறுநீரக தொற்று, கொழுப்பு உறைதல் நோய் நிலை என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.