இலங்கை சட்டம் ஒழுங்கு இல்லாத நாடாக மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அனைவருக்கும் பொதுவான விதத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருநாடு ஒரு சட்டம் என்பதை நடைமுறைப்படுத்தப் போவதாக தெரிவித்துக்கொண்டு ஆட்சிக்குவந்த அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட விதத்தில் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது அதிகாரம் மிக்கவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன அமைப்புகளின் சுதந்திரத்திற்கு அரசாங்கம் சவால் விடுத்துள்ளது. அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்களிற்கு எதிரான பல வழக்குகள் விலக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மக்கள் சட்ட நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.